Friday, 1 May 2015

The occasional composer

This is intended to be a collection the karnatik music song lyrics in a few languages that I have written and set to music over the last year.
Dr.RKE, Trichy
drrke12@gmail.com

ராகம்: கல்யாணி                    தாளம்: ஆதி

(ப)            எங்கே சென்று நான் முறையிட
               சங்கர சுதன்1 காதில் விழும்படி

(அ.ப)         செந்திற் பதியில் அலை ஆர்ப்பரிக்கும்- பரங்
               குன்றில் குடவறை2 எதிரொலிக்கும்

(ச)            பழமுதிர்சோலையில் வண்டுகள்3 கானம்
               கழுகுமலையில் காவடிச்சிந்து4 தாளம்
               தணிகையிலோ வெண்களிறு5 முழங்கும்
               தமியன்6 கதறல் அமிழ்ந்திடும் எங்கும்
குறிப்புகள்:
  1. சங்கர ஸுதன்: சங்கரன் மகன், முருகன்

  1. குடவறை: குகை (கழகத் தமிழ்க் கையகராதியின்படி) வரை என்றால் மலை. குடைவரை என்பது மலையைக் குடைந்து செய்யப்படுவது. தென் திருப்பரங்குன்றத்தில் முன்பு இருந்தது இயற்கையான குகைக் கோவில். அது மூடிப்போனதால் பிற்காலத்தில் குன்றின் வடபகுதியில் குடைவரைக் கோவில் செய்யப்பட்டது.

  1. 2013ல் பழமுதிர்சோலை செல்லும் வழியில் வண்டுகள் கானம் கேட்டு மகிழ்ந்தது இன்றும் நினைவில் உள்ளது.

  1. எட்டயபுர மன்னர் குழாம் கழுகுமலைக்குக் காவடி எடுத்துச் செல்லும் வழியில் உற்சாகப்  படுத்துவதற்காக அண்ணாமலை ரெட்டியாரால் புனையப்பட்டதே காவடிச் சிந்து.

  1. திருத்தணியில் தெய்வானை மணாளனுக்கு, இந்திரன் தன் ஐராவதத்தைத் திருமணச் சீராக வழங்கியதாகவும், முருகப்பெருமான் அதைத் திரும்பவும் இந்திரனிடமே அனுப்பியதாகவும் புராணம். ஆகையால் இத்தலத்தில் முருகன் சந்நிதியின் முன் மயில் இல்லை. திரும்பிப் போகும் யானையே (வெண் களிறு) உள்ளது.

  1. தமியன்: எளியவன், வறியவன்