A song composed on the Sathyamoorthy of Thirumeyyam Divyadesam (Thirumayam)
24/12/15
ராகம்: சுபபந்துவராளி
கண்டேன் உண்மையை மெய்யமலையினுள்
கண்டேன் என்றும் நிலைக்கும் நிதியைக் (கண்டேன்)
கண்டேன் கருணைக் கடலவன் விழியில்
கண்டேன் அருளைப் பொழியும் முகிலைக் (கண்டேன்)
கண்டேன் உய்விக்க வந்த பிராட்டியை,
கண்டேன் துயின்றும் அறியும் பிரானை,
கண்டேன் வரையுள் கிடந்த நெடுமனைக்
கண்டேன் பணிந்தேன் பங்கய அடிகளில் (கண்டேன்)
குறிப்பு:
மெய்யமலை: திருமெய்யத்தில் உள்ள
மலை
உய்ய வந்த பிராட்டி: திருமெய்யத்தில் உள்ள தாயார்
துயின்றும் அறியும் பிரானை: அறி துயில் கொள்ளும் பெருமான்
வரை: மலை
நெடுமன்: நீண்ட நெடிய பெருமான், நீண்ட பாம்பு அதாவது ஆதிசேஷன்
பங்கய: தாமரை
rAgam: subhapanthuvarALi
kaNdEn uNmaiyai meyya malaiyinuL
kaNdEn enRum nilaikkum nidhiyaik (kaNdEn)
kaNdEn karuNaik kadal avan viziyil
kaNdEn aruLaip poziyum mugilaik (kaNdEn)
kaNdEn uyvikka vand'a pirAttiyai
kaNdEn thuyinRum aRiyum pirAnai
kaNdEn varaiyinuL kidantha nedumanaik
kaNdEn paNinthEn pangaya adigaLil (kaNden)
kaNdEn uNmaiyai meyya malaiyinuL
kaNdEn enRum nilaikkum nidhiyaik (kaNdEn)
kaNdEn karuNaik kadal avan viziyil
kaNdEn aruLaip poziyum mugilaik (kaNdEn)
kaNdEn uyvikka vand'a pirAttiyai
kaNdEn thuyinRum aRiyum pirAnai
kaNdEn varaiyinuL kidantha nedumanaik
kaNdEn paNinthEn pangaya adigaLil (kaNden)
·
