Sunday, 20 March 2016

A prayer to Alamelumanga thAyAr

Written After a visit to Thiruchanur aka AlamElumangApuram and Tirupati  Feb 2016

A prayer to Alamelumanga to represent to Srivari: not for wealth or fame or even the pleasures of the heavens, but to get total concentration on Him for one or  two minutes during any of the celebrated sevas at Tirumala. So, He would occupy our mind entirely, with nary any other thought. 

ராகம்: மணிரங்கு        தாளம்: மிஸ்ர சாபு 

அம்மா, அலர் மேலுறை மங்காய்!
எம்மானிடம் விண்ணப்பம் தாராய்.                              (அம்மா)

பொன்னும் புகழும் பாரில் விரும்பி  
நான் அவனிடம் வேண்டவில்லை;
வான் உலக இன்பமும் நாடவில்லை;
தான் நிகரிலான் மலையப்பனிடம்,                                 (அம்மா)

வைகறைப் பொழுது துயிலெழும் வேளையில்1
பைந்தளிர் மலர்மாலை சூட்டும் பொழுதில்2
ஆயிரம் நாமத்தால் அர்ச்சிக்கும் நேரத்தில்3  
வேதியர் ஓதிடும் திருமண விழாவில்4
ஆயிரங் கலசப் புனித நீராட்டலில்5    
தேவியர் இணைந்து ஊஞ்சலாடுகையில்6
ஆயிர தீபவொளி மின்னிடும் சமயத்தில்7
ஏதேனு மொன்றினில் இரண்டொரு நிமிடம்
வேறேது எண்ணமும் இன்றியவன் திரு
முகமென் மனதில் நிலைக்க வேண்டுமென            (அம்மா)

Note: The numbers in superscripts indicate the various sevas at the Tirumala temple
  1. Suprabhatha seva
  2. ThOmAla seva
  3. SahasranAma archana
  4. KalyANOtsava
  5. SahasrakalasAbhishekam
  6. Unjal seva
  7. Sahasradeepa alankAra seva

English transliteration
rAgam: manirangu                   thALam: misrachApu
ammA, alarmEluRai mangAy
emmAnidam viNNappam thArAy                 (ammA)

ponnum pugazum pAril virumbi
nAn avanidam vENdavillai
vAnulaga inbamum nAdavillai
thAn nigarilan malaiyappanidam                   (ammA)

vaigaRaip pozuthu thuyilezum vELaiyil
painthaLir malarmAlai sUttum pozuthil
Ayiram nAmaththAl archchikkum nEraththil
vEthiyar Othidum thirumaNa vizAvil
Ayiram kalasap punitha nIrAttalil
d’Eviyar iNainthu UnjalAdugaiyil
Ayira d’IpavoLi minnidum samayaththil
EthEnum onRinil iraNdoru nimidam
vEREthu eNNamum inRi avan thiru

mukamen manathil nilaikka vEndumena       (ammA)


The Universal Feminine Power (Shakthi)

உலகப் பெண்கள் தினத்தன்று (8.3.16) அண்ட கோடி சராசரங்களையும் இயக்கும் தேவியைப் பற்றி எழுதிய பாடல்

ராகம்: நளினகாந்தி

வளி வெளி எங்கும் நிறைந்தவளே!
களி நட ஈசனின் பங்கினளே!
ஒளி தரு கண்ணுடை உமையவளே!
நளின காந்தியின் உயிர்வடிவே!

தெளிவுறக் கண்டேன் - அவளின்றித்
துளியும் இயங்காது இவ்வுலகம்.
அளிப்பாள் ஊக்கம் எவ்வுயிர்க்கும்
தளிரோ களிறோ நர நாரணரோ

எளிதோ? அவள் திறம் எடுத்தியம்ப;
மிளிர் நகை வதனம் வருணிக்க.
குளிர்வரைச் சிவனுயிர் அவளன்றோ? 
எளியரைக் காத்திடும் தாய் அன்றோ?

வளி: காற்று, வெளி: அண்ட வெளி = space, களிநடம்: ஆனந்த நடனம், நளின காந்தி: அழகுறு ஒளிவீச்சு, ஒரு இராகத்தின் பெயர், தளிர்: முளைக்கும் இலை, தழை, களிறு: யானை, நரர்: மனிதர், நாரணர்: திருமால் போன்ற கடவுள்கள், திறம்: திறமை, சீர் பெருமை, இயம்ப: சொல்ல, மிளிர் நகை வதனம்: புன்முறுவல் மிளிரும் முகம்

வருணிக்க: வர்ணனை செய்ய, குளிர்வரை: குளிரும் மலை= கைலாசம்

Sivalaya Ottam

முன்னாள் திருவிதாங்கூர் (தற்போதைய கன்னியாகுமாரி) மாவட்டத்தின் விளவங்கோடு, கல்குளம் (பத்மநாபபுரம்) தாலுக்காக்களில் உள்ள 12 சிவாலயங்களுக்கு சிவராத்திரியன்று பக்தர்கள் ஓடிச்சென்றே வழிபடுகின்றனர். இந்த சிவாலய ஓட்டம் சுமார் 100கி.மீ பாதையாகும். ஒரு வாரம் நோன்பு நோற்று, காவியணிந்து, இடுப்பில் விபூதிப்பையைக் கட்டிக்கொண்டு, கையில் விசிறி வைத்துக்கொண்டு, "கோவிந்தா, கோபாலா" என்று ஹரி நாமத்தை ஜபித்துக்கொண்டு 12 சிவாலயங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆறு, குளங்களில் குளித்து ஹரனை வழிபடுவது ஒரு ஆச்சரியமான விஷயம். சிவாலய ஓட்டம் தொடங்கியதற்கு 3 புராணக் கதைகள் கூறப்படுகின்றன.
1. புருஷாமிருகம் http://adhvaitha.blogspot.in/2008/07/shivalayottam.html
2. வியாக்கிரபாத முனிவர்
3. சூண்டோதர அரக்கன் http://temple.dinamalar.com/news_detail.php?id=39909
புராணம் எப்படியிருப்பினும், இக்காலத்திலும் காலணி கூட அணியாமல் 2 மாரத்தான் ஓட்டப்பந்தய தூரத்தை ஓடியே கடப்பது என்பது வியத்தகு செயலாகும்.

கருவறையிலிருந்து கல்லறை வரை நாம் ஒடும் வாழ்க்கை ஓட்டத்தையும், இந்தப் புனித சிவாலய ஓட்டத்தையும் தொடர்பு படுத்தி எழுதப்பட்ட பாடல் இது.

ராகம்: வசந்தா

ஓடித் தேடி நித்தம் பிழைப்போரே
ஓடிப் பணிவீர் அரன் ஆலயத்தே                    (ஓடித் தேடி நித்தம் பிழைப்போரே…)

கருச்சிறை விட்டு வந்தநாள் முதல்
வெறும் காசுபணம் சுகம் நிம்மதி நாடி           (ஓடித் தேடி நித்தம் பிழைப்போரே…)

முன்சிறை1 மகாதேவரில்1,2 தொடங்கி
பன்னிரு சிவாலயம் ஒருநாளில் ஓடி
கோவிந்தன் கோபாலன் நாமமே கூறி
போகின்ற வழிக்கு புண்ணியம் சேர்க்க        (ஓடிப் பணிவீர் அரன் ஆலயத்தே)

பத்திரன்3 நந்தி4 தீம்பிலான்5 கிராத-
மூர்த்தி6 கல் குளத்து  நீல கண்டன்7
காலகாலன் 8 சடை9யிரு கோடினன்10,11
மாலன் அரன் இணை நட்டாலத்தனை12     (ஓடிப் பணிவீர் அரன் ஆலயத்தே)




மேல் ஓட்டில் (superscript) கொடுக்கப்பட்ட எண்கள் 12 சிவாலயங்களைக் குறிப்பன. அவையாவன -

  1. திருமலை மகாதேவர் கோவில், முன்சிறை
  2. மகாதேவர் கோவில், திக்குறிச்சி
  3.  வீரபத்திரர் கோவில், திற்பரப்பு
  4. நந்தீஶ்வரர் கோவில், திருநந்திக்கரை
  5.  தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், பொன்மனை
  6. கிராதமூர்த்தி கோவில், பன்னிப்பாகம்
  7. நீலகண்டர் கோவில், கல்குளம்
  8.  காலகண்டர் (காலகாலர் கோவில், மேலாங்கோடு
  9.  சடையப்பர் கோவில், திருவிடைக்கோடு
  10. பரிதிப்பனி மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு
  11. மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு
  12. சங்கர நாராயணர் கோவில், திருநட்டாலம்