உலகப் பெண்கள் தினத்தன்று
(8.3.16) அண்ட கோடி சராசரங்களையும்
இயக்கும் தேவியைப் பற்றி எழுதிய பாடல்
ராகம்: நளினகாந்தி
வளி வெளி எங்கும் நிறைந்தவளே!
களி நட ஈசனின் பங்கினளே!
ஒளி தரு கண்ணுடை உமையவளே!
நளின காந்தியின் உயிர்வடிவே!
தெளிவுறக் கண்டேன் - அவளின்றித்
துளியும் இயங்காது இவ்வுலகம்.
அளிப்பாள் ஊக்கம் எவ்வுயிர்க்கும்
தளிரோ களிறோ நர நாரணரோ
எளிதோ? அவள் திறம் எடுத்தியம்ப;
மிளிர் நகை வதனம் வருணிக்க.
குளிர்வரைச் சிவனுயிர் அவளன்றோ?
எளியரைக் காத்திடும் தாய்
அன்றோ?
வளி: காற்று, வெளி: அண்ட வெளி = space, களிநடம்: ஆனந்த நடனம், நளின காந்தி: அழகுறு ஒளிவீச்சு, ஒரு இராகத்தின் பெயர், தளிர்: முளைக்கும் இலை, தழை, களிறு: யானை, நரர்: மனிதர், நாரணர்: திருமால் போன்ற கடவுள்கள், திறம்: திறமை, சீர் பெருமை, இயம்ப: சொல்ல, மிளிர் நகை வதனம்: புன்முறுவல் மிளிரும் முகம்
வருணிக்க: வர்ணனை செய்ய, குளிர்வரை: குளிரும் மலை= கைலாசம்
No comments:
Post a Comment