47: ராகம்: சுத்த தன்யாசி
13/04/16
வா வா மயில்
வாஹனா- அழகா
ஆறாறு கரம்
வீசி வா- பரமா (வா வா)
காமாரி மகன்
அல்லவா – முருகா
காமாதிப் பகை
தீர்க்க வா - விமலா (வா வா)
மாமானும் மாலல்லவா-
என்போல்
சாமானியர்
காக்க வா- பண்பொழி
நாதா திருமலை வேலா யுத – வி
-சாகா, வரமளிக்க
வாவா வாவா (வா வா)
குறிப்பு
ஆறாறு = 6 + 6= 12
பரமா = கடவுளே
காமாரி = காமனை அழித்த
சிவன்
காமாதிப் பகை = காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் என்ற அறுவகை உட்பகை
விமலா = தூயவனே
(மலங்கள் அற்றவனே)
மாமான் = அம்மான், தாயின் தமையன்
மால் = விஷ்ணு, காக்கும் கடவுள்
பண்பொழி = தென்காசி
அருகில் உள்ள திருமலையின் அடிவாரத்தில் உள்ள சிற்றூர்
திருமலை வேலாயுத = திருமலைக்
குமாரசாமி
விசாகா = முருகா
திருமலை வேலா
உதவி - சாகா வரம் அளிக்க வா என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம்
English transliteration
vA vA mayil vAhanA - azhagA
ARARu karam vIsi vA- paramA (vA vA)
kAmAri magan allavA - murugA
kAmAthip pagai thIrkka vA- vimalA (vA vA)
mAmAnum mAlallavA- enpOl
sAmAniyar kAkka vA- paNpozhi
nAthA thirumalai vElAyutha vi
sAkA varamaLikka vAvA vAvA (vA vA)
English meaning
Come, come Oh, the handsome peacock rider, come swinging your 12 arms, oh Lord
Oh, murugA, aren't you the son of (shivA) the one who burnt manmad'a (kAma): come to burn up the six internal enemies within me (viz: kAma - passion, krOdha- anger, lObham- covetousness, mOham- attachment, mad'am: conceit, mAtsaryam: jealousy)
Aren't you the nephew of the thirumal (who is a protector)- please protect commoners like me. The Lord of Panpozhi (the village on the foothills of thirumalai), the vElAutha of thirumalai, vis'Aka (a name for muruga), come, come to grant me the boon.
(parsed differently, the last 2 lines can be taken to mean: thirumalai vElA uthavi (help) sAgA varamaLikka vA (grant me the boon of eternity, deathlessness)
