Monday, 22 June 2015

a song depicting the love of Nandan the foster father of Krishna

நந்தன் அவனிடத்து வராமல், தாய் யசோதையிடமே இருக்கும் பாலகன் கண்ணனிடம் கொஞ்சிக் கெஞ்சுதல். Composed on 12/05/2015
ராகம்: யமுனாகல்யாணி

கண்ணா வாடாயென் கண்மணி வாடா
மன்னா வாடாயென் செல்லமே வாடா

அம்மாவின் சேலையில் முகம் புதைக்காதே
எந்நாளும் என்னிடம் அஞ்சி நடுங்காதே

வெண்ணையை ஒளிப்பாள், உரலில் கட்டுவாள்
அண்டையோர் சொல்கேட் டுன்னைத் திட்டுவாள்
கண்ணைக் கசக்கினால் பூச்சாண்டி காட்டுவாள்
மண்ணை அளைந்துன்னை ஆட விடுவாளோ?

முனி கர்கரும் சொன்னார் நீ பரந்தாமனாம்
இனி நானு மிதனை நம்பிட வேண்டுமாம்
நுனிவாயும் வடியுமா நாராயணனுக்கு
குழிவிழும் பட்டுக் கன்னமே தவனுக்கு