Wednesday, 6 April 2016

A song in Saramathi on Rama Naama

Song 46: 31/03/16 - 02/04/16
ராகம்: ஸாரமதி

ராம நாமத்தைப்போல் வேறொரு
     உய்வழி உண்டோ- பாமரர் நமக்கு

முக்கண்ணனார் தம் தேவியை1 - மும்முறை
     ஓதப் பணித்த மிகலகு உபாயம்

வேத ஶாஸ்த்ரமோதி நேம நிஷ்டை செய்துத்
தேடவொண்ணாப் பேரின்ப வீடு2 தரும்-பேர்
மாற்றிச் சொன்ன வேடனும் கவியானனே3
கூற்றில்4 வீழாதெம்மைக் காக்கும் மந்த்ரமே

குறிப்பு

1.விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் கடைசியில் பார்வதி, சிவபெருமானிடம் "கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம், பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ " என்று கேட்க, அதற்கு சிவபெருமானும் " ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே" என்று சொன்னதை அனுபல்லவியில் சொல்லப்படுகிறது'ராம மந்த்ரவ ஜபிஸோ ஏ மனுஜா' என்ற புரந்தரதாஸரின் கிருதியில் "சோமஶேகர தன்ன பாமெகொரெதிக மந்த்ர" என்று கூறுகிறார் 
 
2. பேரின்ப வீடு = மோட்சம். மேற்சொன்ன அதே தாஸர் கிருதியில்  "முகுதி மார்க்ககே இதே மூல மந்த்ர" என்று குறிப்பிடுவதைக் காண்க.

3. ரத்னாகரன் என்ற வேடன் (வழிப்பறிக் கொள்ளையனாக மாறிய பின் நாரதரின் சொல்லுக்கு இணங்கி)ராம ராம என்று சொல்லத்தெரியாமல் மரா மரா என்று ஜபம் செய்து, வால்மீகி என்ற மகாகவியானது சரணத்தில் சொல்லப்படுகிறது


4. கூற்றில்= யமனிடம் 

No comments:

Post a Comment