Wednesday, 23 December 2015

A song on Thiruvallikkeni Parthasarathy

Song 36: 16/12/15
Song composed on the DivyadEsam of Thirumayilai ThiruvallikkENi in Chennai.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது இயற்றப்பட்டது   

ராகம்: ஆரபி                                                                         தாளம்: ஆதி 

விஜய ஸாரதியைப் பணிவோம் வாருங்கள்
அஜய மானதறவே அழியும் பாருங்கள்             (விஜய)

வேங்கட கிருஷ்ணனாய் மூல உருவம்
ஏங்கிடும் பக்தரின் புகலவன் சரணம்                (விஜய)

அண்ணனும் நண்பனும் மகனும் பெயரனும் 
கண்ணனின் துணைவி ருக்மிணியுடனே
தெள்ளிய சிங்கமன் னாதவரத ராமன் 
அல்லியம் கேணியின் சத்திய குருவாம்              (விஜய)

குறிப்பு:
விஜயன்: அர்ஜுனன், பார்த்தன். எனவே விஜய ஸாரதி: பார்த்தஸாரதி
அஜயம்: தோல்வி.   எனவே  அஜய மானதறவே = அஜயம் ஆனது அறவே: தோல்வியானது முற்றிலும்
வேங்கட கிருஷ்ணன்: திருவல்லிக்கேணியில் உள்ள மூலவர்
புகலவன்  = புகல் அவன்
சரணம்: பாதம்
அண்ணன்: பலராமன்நண்பன்: சாத்யகி என்ற யுயுதானன்மகன்: கண்ணனின் மகனான பிரத்யும்னன், பெயரன்: கண்ணனின் பேரனான அநிருத்தன். தாயார் ருக்மிணியுடன் இவர்களும் அங்கு சேவை சாதிக்கிறார்கள்.
தெள்ளிய சிங்கம்: யோக நரஸிம்ஹர், மன்னாதன்: நம்பெருமாள், ரங்கராஜன், வரதன்: கஜேந்திர வரதன், ராமன்: சக்ரவர்த்தித் திருமகன், இந்த 4 பெருமாள்களும் இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ளனர்
அல்லியம் கேணி= அல்லி அம் கேணி: அல்லி மலர்களால் அழகாக்கப்பட்டா கேணி = திருவல்லிக்கேணி
சத்திய குரு: கீதாசாரியன் = பார்த்தஸாரதி

rAgam: Arabhi

vijaya sArathiyaip paNivOm vArungaL 
abhayamAnathaRavE aziyum pArungaL   (vijaya)

vEnkata krishNanAi mUla uruvam
Engidum bhaktharin pugalavan charanam  (vijaya)

aNNanum naNbanum maganum peyaranum
kaNNanin thuNaivi rukmiNiyudanE
theLLiya singaman nAd'avarad'a rAman
alliyam kENiyin saththiya guruvAm           (vijaya)


No comments:

Post a Comment