Sunday, 14 February 2016

05/02/16 Written after a recent visit to Tiruttani
ராகம் கல்யாண வஸந்தம்

நேரமில்லையோ? கடைக் கண்ணால் பார்க்க -
என் குறை தீர்க்க                                                        (நேரமில்லையோ?)

கேட்கவில்லையோ? பன்னிரு செவியில்- ஒன்றுகூட
தேக்கமென்னவோ? பதிதன் எனைக் காத்திட           (நேரமில்லையோ?)

நோக்கமென்னவோ? அறுமுகம் பராமுகமானது
போக்கனல்லவோ? நான் வழி தவறினாலும்
காப்பதல்லவோ? உன் கடமை மறந்தாயோ?
மாற்றமென்னவோ? தணிகைமலை வேலனே          (நேரமில்லையோ?)

குறிப்பு: தேக்கம்= தயக்கம், காலம் தாழ்த்தல்பதிதன்= ஏழை, தாழ்ந்தவன்
பராமுகம் = அலட்சியம், போக்கன் = செல்பவன், வழிப்போக்கன், அலைபவன்

மாற்றம் = மறுமொழி, பதில்       

'ஓ, ஓ' என்று அரற்றும் பக்தனின் நிலையை வெளிப்படுத்த இந்தப் பாடலில் 'ஓ' என்ற ஓசை மிகையாக்கப்பட்டுள்ளது. 

Hence, a raaga that reflects this mood of entreaty, i.e., Kalyanavasantham, has been chosen

nEramillaiyO? kadaikkaNNAl pArkka - en kuRai thIrkka  (nEraillaiyO?)

kEtkavillaiyO? panniru seviyil onRu kUda 
thEkkamennavO? pathithan enaik kAththida               (nEraillaiyO?)

nOkkamennavO? aRumukam parAmukamAnad'u
pOkkanallavO? nAn vazhi thavaRinAlum
kAppad'allavO? un kadamai maRanthAyO?
mARRamennavO? thaNigai malai vElanE                 (nEraillaiyO?)


No comments:

Post a Comment