Thirumalai ashtakam
Written on 31/01/16 after a visit to Tirumala
A son et lumière in words on the natural divine beauty
of Tirumala
நெடிய யெழுமலை நின்அரவணை ஒக்கும்
கடியுவெண் மேகம்பாற் கடல்நிறம் காட்டும்
இடியி னொலியோ வெண்சங்கின் முழக்கம்
விடியு ங்கதிரவ னுன்முக வொளியே
1
உயர்ந்த மரங்களோ வீடுவன் விசயன்
வியந்த பெருவுருத் தோற்றம் சுட்டும்
கயந்த வரொடுக்கும் வில்லின் வளைவை
வேய்மரத் தண்டு உணர்த்து மாங்கே 2
மின்னும் மின்னலின் பளீரிடும் ஒளிதனை
நின்வலக் கரத்தின் ஆழிதான் செய்ததோ?
பின்னிய கொடிகள் கொழுவில் படர்தல்
மன்னிய தேவியுன் நெஞ்சு சார்ந்ததே 3
பாயும் பாவவி னாசினித் தீர்த்தம்
தோயும் நீர்மைப் பண்பாய்த் தோன்றும்
சாயும் கொடியில் அலரும லர்களோ
மாயும் அவனெழில் இலையென்றே
4
வண்டினம் புட்கள் எழுப்பு மின்னொலி
சுண்டியிழுக்குமுன் குழல் இசையாம்
எண்டிசை விரவிய மூலிகை வாசம்
மண்டிய துழாயின் நறுமணமே 5
மலர்களிட் கசியும் தேனோவுனது
மலர்விழி சுரக்கும் கருணை ஒத்தது
பலர் பணிந்தேத்து நின்பாதச் செம்மை
அலர்ந்த கமலச் செந்நிறமாமே 6
தங்கப் பொலிவில் மின்னிடும் சிகரம்
எங்கள் அண்ணலின் ஒளிவிடு உடலம்
தங்கும் திருமகள் முயங்கிடும் மார்வம்
வெங்கட* வரையின் ஓர்முழையே 7
இயற்கையே தேவு, தேவே இயற்கையாம்
வியத்தகு மலையைக் கண்டவர் சென்றவர்
வியனுல கேகவும் விழையா ரென்று
இயம்பினர் மூதோர் வழுவறவே 8
Note: * The correct form is வேங்கட but for sake of rhyme, the oft-used
வெங்கட is employed here.
These are roughly rendered in English below:
The long winding range of hills resembles His snake bed
The fleeting white clouds are the colour of the Milky Ocean
The rumble of thunder is His Panchajanya’s sound
The effulgence of the rising sun is the radiance of His
face 1
The tall trees reflect his mega form
Which produced awe in Bhishma and Arjuna
The arching of the bamboo stems
Resemble His bow, that destroys the villains 2
The blinding luminance of yonder lightning
Is it from the discus spinning in your right hand?
Do the creepers winding around supports take their form
From the Devi, who supports herself on your chest? 3
The flowing rivulet of Papavinasini
Recapitulates your Neermai (kalyana guna svabhavam)
The budding flowers in the vines that tilt
Are ashamed that they do not have His beauty 4
The sweet notes from the birds and bees
Are nothing but Your flute music that tugs our hearts
The
healing smell of medicinal plants* spreading in all 8 directions
Have
their basis in Your Thulasi garlands 5
The
honey that oozes from the flowers
Is
akin to the sympathy (karuNai) flowing from Your eyes
The
redness of Your feet that are worshipped by many
Is
seen in the blooming lotus petal 6
The
peak that shines bright as gold
Is the
radiant body of our God (aNNal)
The
chest that is embraced by the ever-resident Devi
Is the
cave (muzhai) set among the Venkata hills 7
Nature
is God, God is Nature
Those
who see or climb this wondrous hill
Will
not desire even going to the Devaloka
So
said the elders, faultlessly 8
Note: *near Japali Hanuman temple there are many
medicinal plants
No comments:
Post a Comment