Song: 42 26/02/16
திருவெள்ளறை திவ்யதேசத்தின்
புண்டரிகாக்ஷப் பெருமாள் மீது இயற்றப் பட்டது
ராக3ம் : தி1லங் பா4ஷை: மணிப்ரவாளம்
பு1ண்ட3ரிகா1க்ஷனே த4ர்ம ரக்ஷக1னே
பா1ண்ட3வ ப1க்ஷனே அஷ்டா1க்ஷரனே (பு1ண்ட3ரிகா1க்ஷனே)
லக்ஷ்மீ ரமணனே வீக்ஷக1ப்ரியனே
ஸஜ்ஜன ஹ்ரு'த3ய க1க்ஷ நிவாஸனே (பு1ண்ட3ரிகா1க்ஷனே)
ராக்ஷஸ ஹரனே து3ஷ்ட1 ஶிக்ஷக1னே
அக்ஷய ஸுபி4க்ஷ த3க்ஷ தா3யக1னே
உத்1த1ர த3க்ஷிண அயன த்3வாரனே
ஶ்வேத1வராஹ க்ஷேத்1ர நிவாஸனே
ப1ங்க1ஜவல்லீ ஆகா1ங்க்ஷா பூ1ரக1னே (பு1ண்ட3ரிகா1க்ஷனே)
பு1ண்ட3ரிகா1க்ஷனே தாமரைக் கண்ணனே, த4ர்ம
ரக்ஷக1னே அறங்காவலனே
பா1ண்ட3வ ப1க்ஷனே பாண்டவர் கட்சியினனே, அவர்களுக்கு
ஆதரவாக இருந்தவனே
அஷ்டா1க்ஷரனே எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்பதால் துதிக்கப்படுபவனே
லக்ஷ்மீ ரமணனே திருமகள் கேள்வனே வீக்ஷக1ப்ரியனே காண்போர் விரும்புபவனே
ஸஜ்ஜன ஹ்ருத3ய க1க்ஷ நிவாஸனே நல்லோர் இதய அறையில்
வசிப்பவனே
ராக்ஷஸ ஹரனே அரக்கர் மாய்ப்பவனே து3ஷ்ட1 ஶிக்ஷக1னே
தீயோரைத் தண்டிப்பவனே
அக்ஷய குறைவற்ற ஸுபி4க்ஷ செழிப்பை
த3க்ஷ வேகமாக, உடனே
தா3யக1னே அளிப்பவனே
வக்ஷ: ஸ்த2ல ஸ்தி2த1 திருமார்பில் உறையும் நாரீ ஈக்ஷக1னே பெண்ணைக் கருத்தில் கொண்டவனே
லோக1 ஶிக்ஷக1னே
உலகத்திற்கெல்லாம் நல்லாசிரியனே மோக்ஷ ப்ரதா3த்1ர்னே மோட்சத்தை வழங்குபவனே
உத்1த1ர த3க்ஷிண அயன த்3வாரனே உத்தராயண தக்ஷிணாயணக் காலங்களில்
தனித்தனி வாயில்களில் (திருவெள்ளறையில்) காட்சி அளிப்பவனே
ஸ்வஸ்தி1க1 நிபா1ன ஶ்வேத1கி3ரீஶனே ஸ்வஸ்திக வடிவிலான குளம் இருக்கும்
(திருவெள்ளறையில்) வெண்குன்றில் விளங்குபவனே
ஶ்வேத1வராஹ க்ஷேத்1ர நிவாஸனே வெண் வராஹ க்ஷேத்ரமான திருவெள்ளறையில்
கோவில் கொண்டவனே
ப1ங்க1ஜவல்லீ ஆகா1ங்க்ஷா பூ1ரக1னே பங்கயவல்லித் தாயாரின் மனவிருப்பத்தை
நிறைவேற்றுபவனே
‘க்ஷ’ எனும் ஓசை தமிழ்ச் சொற்களில் காண்பதில்லை. ‘க்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஷ’ என்ற வடமொழி (க்ரந்த) உயிர்மெய்யெழுத்தும் சேர்ந்து ஒலிக்கும்
இந்த ஓசையைப் பாடல்களில் பயன்படுத்துவது எந்த மொழியிலும் அரிதே. இப்பாடலில் உள்ள சொற்கள்
வடமொழியிலிருந்தாலும், சொற்களின் ஈற்றில் 'ஏ, னே' என்ற
விளி வேற்றுமை சேர்ப்பது தமிழ் மரபாகும். எனவே இது மணிப்ரவாளத்தில் புனையப்பட்டதாகக்
கருதலாம்.
(க்ஷ என்னும் ஆண்பால்
பெயர்ச்சொல்லிற்கு வடமொழியில் பல அர்த்தங்கள் அகராதியில் உள்ளன:
1. இழப்பு, அழிவு 2. மின்னல் 3.
காப்பாற்றுபவன், (நிலத்தைக்
காப்பாற்றும்) குடியானவன்
4. நரஸிம்ஹ அவதாரம்)
rAgam: Thilang Language: manipravAlam
puNdarikAkshanE dharma rakshkanE
pANdava pakshanE ashtAksharanE
lakshmI ramaNanE vIkshaka priyanE
sajjana hrd'aya kaksha nivAsanE
rAkshasa haranE dushta s'ikshakanE
akshaya subhiksha d'aksha d'AyakanE
vaksha:sthalasthit'a nArIIkshanE
loka s'ikshakanE mOksha prad'At'rnE
ut't'ara d'akshiNa ayana d'vAranE
svast'ika nipAna s'vEt'a girIs'anE
s'vEt'a varAha kshEt'ra nivAsanE
pangkajavallI AkAngkshA pUrakanE
No comments:
Post a Comment