Saturday, 19 September 2015

05/09/15 Krishna Jayanthi
கண்ணன் தன் பிறந்த நாளன்று அவள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லியும் இன்னும் வராததால் மனம் பதைத்துப் போகும் கோபிகையின் பாடல்

ராகம்: மாண்ட் 

(ப)   வாசலில் வாரானோ பார்த்துச் சொல்லடி
மோசம் பண்ணக் கூடுமடி - கண்ணன்           (வாசலில்)

(அ.ப) அஷ்டமி  நாளில் நம் ஏழைக் குடிலிற்கு
இஷ்டமாய்ச் சொன்னானே வருவேனென்று     (வாசலில்)

(ச)   நெடுக்கிலும் வண்ணப் பாதம் வரைந்தேன்டி
அடுக்கிலோ வெண்ணெய் பால் நிறைத்தேன்டி
கடுக்கென இலாமென் பக்ஷணம் செய்தேன்டி

அடுத்தவள் வீட்டில்ஏன் ரொம்ப நேரமடி?        (வாசலில்)

No comments:

Post a Comment