Yashoda pleads with her husband Nandagopa to go look for her son who has not returned home
8/9/15
மாடு மேய்க்கச் சென்ற கண்ணன்
வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் யசோதை தன் கணவன் நந்தனைப் பார்த்துப் பாடுவதாக
அமைந்த பாடல்
ராகமாலிகை
புன்னாகவராளி
(அ.ப) மையாயிருள் கவியுமுன் கையோடு
கூட்டி வாரும்
வையாதிருப்பேன்
இனிக் கையாளிப் பயலையுடனே (ஐயா நீர்)
நாதநாமக்ரியா
(ச.1) மையானும்
முட்டியதோ அரிட்டனை அழித்தவனை
பைந்நாகம்
தீண்டியதோ முலை நஞ்சை உண்டவனை
சக்கரம்தான்
மோதியதோ சகடம் உதைத்தவன்மேல்
வக்காதான்
கொத்தியதோ வகாசுரன்வாய் எரித்தவனை (ஐயா
நீர்)
செஞ்சுருட்டி
(ச.2) பசியால் மயங்கினனோ
அண்டமெலாம் உண்டகுட்சி
திசிமாறிப்
போனானோ அண்டருக்கும் வழிகாட்டி
ஈதொன்றும்
இருக்காது விளையாட்டில் மறந்திருப்பன்
தீதொன்றும்
அண்டாது தீயதெல்லாம் அழிப்பவனை (ஐயா நீர்)
அரும்பதவுரை
மையாயிருள் கவியுமுன்: கண் மை போல் இருட்டுவதற்கு
முன்பு, கையாளி: துட்டன், மாய்மாலன், மையான்: காட்டெருமை, அரிட்டன்: மாடு வடிவமாய், கண்ணனைக் கொல்ல
வந்த அரிஷ்டாசுரன், வக்கா: கொக்கு, அண்டம்: பிரபஞ்சம், குட்சி: வயிறு, திசி: திசை,
அண்டர்: தேவர், அண்டாது: நெருங்காது
No comments:
Post a Comment