Saturday, 19 September 2015

A simple song in Malahari on Malaikkottai Uchchip pillaiyaar

Raga Malahari                                        29.08.2014
Song composed on Trichy Malaikkottai Uchchip pillaiyar in ManipravaaLam

(ப)    கணராஜனே கிரிவாசனே
       குணசீலனே இபரூபனே              
       கணராஜ சிரகிரி வாசனே
       குணசீலனே இபரூபனே               (கணராஜனே)

(அ.ப) தந்திமுகனே உமை பாலனே
நம்பி உளேனே இணை பாதமே      (கணராஜனே)

(ச)    பாலசந்த்ரனே விக்ன ராஜனே
மூலாதாரனே ரக்த வர்ணனே
லம்போதரனே கஜ கர்ணனே
ஏறி வந்தேனே வரம் தாருமே
மலையேறி வந்தேனே வரம் தாருமே  (கணராஜனே)
Note:

கணராஜன்:  பூத கணங்களின் அரசன், விநாயகர், கிரி: மலைக்கோட்டைக் குன்று, சிரகிரி: திருச்சிராப்பள்ளி, இபம்: யானை, தந்திமுகன்: தந்தம் பொருந்திய முகத்தையுடையவன், இணை பாதம்: இரு திருவடிகள், கஜ கர்ணன்: யானைக் காது கொண்டவன்  

No comments:

Post a Comment