A song on Ahobilam Yoganarasimha
August 2014
அஹோபிலம் யோகநரசிம்மரைப் பற்றிய பாடல்
ராகம்: ரீதிகௌளை
(ப) ஆளாய் அரியாய்த் தோன்றிய பெருமானே
வாளாந்திருப்பதென்னே?- முறையீடு
கேளாதிருப்பதென்னே?- இன்னும்
ஏளாதிருப்பதென்னே?- அந்தியில் (ஆளாய்)
(அ.ப) கோளாலே படும் துன்பம் சொல்லி
மாளாதே - தூணில் பாலனுக் கிரங்கி (ஆளாய்)
(ச) கூர் எயிறும் நீள் உகிரும் கொண்டு எந்தன்
பேர் இடரும் ஊழ்வினையும் கிழித்தி டுந்தன்
சீர் புகழும் பரகாலன் துதித்த
அந்தம்
சேர் குன்றம் சிங்கவேள்
யோகநர சிம்மம் (ஆளாய்)
அரும்பதவுரை
ஆள் அரி- நர சிம்ஹம்
வாளாந்து- அலட்சியமாக
ஏளாது - துயில் எழாது (வைணவர் வழக்கு)
அந்தியில் - மாலைப்பொழுதில்
பாலன் - பிரஹலாதன்
கூர் எயிறு - கூர்மையான பல்
நீள் உகிர் - நீண்ட நகம்
பரகாலன் - திருமங்கையாழ்வார்
அந்தம் - அழகு
சிங்கவேள் குன்றம்- அஹோபிலம்
No comments:
Post a Comment