Thursday, 17 September 2015

Vathapi Ganapathim translated in Tamil
15/09/15. Italics sung in maDhyama kaalam. The tune is exactly the same as Dheekshithar's original
முத்துஸ்வாமி தீட்சிதரும் திருவாரூர் வாதாபி கணபதியும் மன்னிப்பார்களாக !!!!

ராகம்: ஹம்ஸத்வனி                                                                தாளம்: ஆதி

(ப)     வாதாபி கணபதியைப் பணிவோம்
ஆனை முகவனை நல்வரமருளும்                                             (வாதாபி)

(அ.ப) பூதகணங்கள் தொழும் திருவடிகள்
பூதமைந்தும் நிறை உலகக் காரணன்
ஆசை அகலவே யோகிகள் தொழும்
நாசம் செய்வனே தீவினை யெலாம்                                            (வாதாபி)

(ச.)    பண்டு குறுமுனி வணங்கிய உருவம், முக்கோண மத்தியிலே
கண்டு வானோர் மனதில் நிறுத்தினர் மூலாதார சக்ரத்திலே
உடலில் நால்வாக்கின் வடிவமாம், பிரணவம் போல் வளைந்த முகமாம்
நுதலில் இந்தின் பிறை துலங்கு மிடக்கரத்தில் கன்னல் தண்டை ஏந்தும்
கஞ்சக் கைகளில் பாசம் பழங்கள் வினைகள் தீர்க்கும் பெருவயிறோன் தன்
தந்தை குமரன் மகிழும் ரூபம் இசையில் மயங்கும் இபமாமுகனை          (வாதாபி)


Note: பண்டு: முற்காலத்தில், குறு முனி: அகஸ்தியர், நால் வாக்கு : பரா (primordial transcendental sound), பச்யந்தி (synaesthetic aspects of speech), மத்யமா (mental speech), வைகரீ (physical speech) என்ற நான்கு வகையான வாக்குகள், நுதல்: நெற்றி, இந்தின் பிறை: சந்திரனின் கீற்று,  கன்னல்: கரும்பு, கஞ்சம்: தாமரை, பாசம்: பாசக்கயிறு, இபம்: யானை. 

No comments:

Post a Comment