August 2014
A song inviting Narayana to come and take rest in the bhaktha’s
heart
ராகம்: ஸாரங்கா
(ப) இங்கேயே இருக்கலாமே எங்கேயும் போகாமல்
என்னகத்தே ஓய்வெடுக்க (இங்கேயே)
(அ.ப) அங்கங்கே பாரினிலே அபலர் ஒலி கேட்டால்
வங்கக்க டல்விட்டு விரைந்தோடி வரும்நீ (இங்கேயே)
(ச.1) அன்றொருநாள் கரிகாக்க மின்னாழி எறிந்து
வன்முதலை வாயறுத்து உன்தோளும் நொந்துளதே
மண்ணுலகு விண்ணும் ப3லிதலையும் அளந்ததனால்
புண்ணான வுன்பாதம் இளைப்பாற்றிக் கொள்ள (இங்கேயே)
(ச.2) மூவுலகு படைத்தவனை
நாபியினில் தாங்கியவா
பூ4மகளும் திருமகளும்
மென்மடியில் ஏந்தியவா
சூதரவைப் பெண்ணிற்கு நீள்சேலை வாங்கியவா
ஊரதனில் உனக்கில்லை ஓய்வொழிவு
அதனால் (இங்கேயே)
Note:
வங்கக்கடல்: திருப்பாற்கடல் (ஆண்டாள் திருப்பாவை 30: வங்கக்
கடல் கடைந்த),
கரி:
கஜேந்திரன் என்ற யானை, மின்னாழி: மின்னும் சக்கரம்,
முதல் சரணத்தின் மூன்றாவது வரி வாமனாவதாரக் கதையைக் குறிக்கிறது, மூவுலகு
படைத்தவன்: பிரும்மா, நாபி: தொப்புள், பூ4மகள்:
பூமாதேவி, திருமகள்: லக்ஷ்மி, சூதரவைப் பெண்: திரௌபதி
No comments:
Post a Comment