Saturday, 19 September 2015

Raman Inimai
Use this link to listen to the song
https://onedrive.live.com/redir?resid=467EBA89D7C571FB!34231&authkey=!AJuH3K4mtAT-SRA&ithint=file%2cwav

டாக்டர். ராமகிருஷ்ண ஈஸ்வரன், திருச்சி எழுதிய பாடல் 28/04/15
                இராமன் இனிமை

ராகம்: ஸஹானா     தாளம்: ஆதி  

(ப)   இத்தனை இனிய வதனம் எப்படிப்
      பெற்றனை ராமா காரணம் சொல்வாய்     (இத்தனை)

(அ.ப) தந்தையின் வேள்விப் பாயசச் சுவையா?
      அன்னையின் அமுதை உண்ட பயனா?      (இத்தனை)

(ச)   கனிகளைக் கிழவி சுவைத்துத் தந்ததா?
      வனிதைமணியின் ஒளி,துளி பட்டதா?
      தமிழகச் சிற்பிகள் வடித்தபுன் னகையா?
      பதின்மர், கம்பனின் தீஞ்சுவைத் தமிழா?    (இத்தனை)

அரும்பதவுரை:
வதனம்: அழகிய முகம்
அன்னை: கோசலை
கிழவி: சபரி
வனிதைமணி: சீதை (தியாகராஜர் க்ஷீரஸாகர என்ற கிருதியில் நாரீமணி என்று அழைக்கிறார்)

பதின்மர்: பத்து ஆழ்வார்கள்

No comments:

Post a Comment