Arangan thaalaattu
This song was composed in Margazhi (3/1/15), a month in
which the Perumal is awakened. We all know it is irritating to be woken up from
sleep. It is a mother’s instinct to put her baby to sleep. With this maternal
‘bhavam’ this song was composed.
ராகம்: நீலாம்பரி அரங்கன்
தாலாட்டு தாளம்: ஆதி
(ப) கண்வளராய் அரங்கா அங்கண்வளராய்
மண்ணுலக வைகுண்ட ஸ்ரீரங்கத் தொட்டிலிலே (கண்வளராய்)
(ச.1) காவிரி இரு கரங்களால் நோகாமல் ஆட்டிடவே
ஆயிரந்த லைகொண்ட அரவணையின் மீதினிலே (கண்வளராய்)
(ச.2) அதிதி தந்த செவ்வாடை மணியிடையி லணிந்தே
பரிதிமதி விழியினனே அந்தண பாலகனே (கண்வளராய்)
(ச.3) குருகுலத்தில் பின்னாளில் அருந்ததியு முன்னை*
கருக்கலிலே எழுப்புவரே உறங்கிடுவா யின்றே (கண்வளராய்)
(ச.4) க3தை4பயில அண்ணனு முன்* * தூக்கம் கலைப்பானே
அதைக்காணச் சகியேனே துயின்றிடுவாய் இப்போதே (கண்வளராய்)
(ச.5) சுரதானி கவர்ந்த ஈரங்கொல்லி முகர்ந்தெடுத்த
வரதா அபயகர உருவே தாலேலோ தாலேலோ (கண்வளராய்)
Note: * அருந்ததியு முன்னை:
அருந்ததியும் உன்னை
* * அண்ணனு
முன்: அண்ணனும் உன்
மூன்றாவது சரணம் இராமனின் அன்னை கோசலையின் கவலையைக் கூறுகிறது. “குழந்தாய், நீ சற்றே வளர்ந்தவுடன் வசிட்டரின் குருகுலத்திற்கு அனுப்பப்படுவாய். அங்கு வசிட்டரின் மனைவி அருந்ததி உன்னைத் தூங்கவிடாமல் விடியும் முன்னரே எழுப்பிவிடுவார்கள், அதனால் இப்பொழுதே உறங்கித் தீர்த்துவிடு” என்பதாகக் கற்பனை.
நான்காவது சரணம் யசோதையின் கூற்றாக அமைந்துள்ளது. “கண்ணா, உன் அண்ணன் பலராமன் 'கதை' (mace) யுத்தம்
பழகுவதற்காக அதிகாலையில் அடித்து எழுப்பிவிடுவான். ஆழ்ந்து தூங்கும் உன்னை அவன் எழுப்புவதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பேன்? நேரம் கிடைக்கும் போது இப்பொழுதே நித்திரை செய்வாய்” என்று சொல்வதாகச் சித்தரிக்கப்படுகிறது.
கடைசி வரிகள் ஸ்ரீரங்கத்தின் சரித்திரம் பகரும் இரு நிகழ்வுகளைக் குறிக்கின்றன. அரங்கனின் மாநகரைச் சூறையாடிய முகம்மதியர் அவனுடைய உற்சவ மூர்த்தியையும் கவர்ந்து சென்றனர். சுரதானி என்ற முகம்மதிய இளவரசி அழகிய மணவாளனின் மேல்
மையல் கொண்டாள். அரங்கன் உரு அவளைக் கவர்ந்தது. அந்தப் பொம்மைக்கு அவளும் அவள் மொழியில், அவள் இசையில் தாலாட்டியிருக்கலாமல்லவா? இவளே துலுக்க நாச்சியாராக இன்றும் ஸ்ரீரங்கத்தில் காணப்படுகிறாள்.
பொருளுரை
அரங்கனைத் தன் குழந்தையாக பாவித்து, ஒரு அன்னையின் உளப்பாங்கில் பாடும் தாலாட்டு.
இவனே வாமனச் சிறுவனாக வந்தவன் என்பதால் இரண்டாவது சரணத்தில் அவ்வவதாரக் காட்சி சுட்டப்பட்டது. கசியபர்- அதிதி தம்பதியினரின் மகனாக வந்த வாமனனுக்கு, அவன் பூணூல் விழாவில் எல்லோரும் பரிசுகள் வழங்கினர். அதிதியிடம் வேறொன்றும் இல்லாததால், ஒரே ஒரு சிவந்த துணியைக் கோவணமாகக் கட்டினாள். அக்குழந்தைக்கு ஒரு விழி சூரியன் (பரிதி) ஒன்று சந்திரன் (மதி).
மூன்றாவது சரணம் இராமனின் அன்னை கோசலையின் கவலையைக் கூறுகிறது. “குழந்தாய், நீ சற்றே வளர்ந்தவுடன் வசிட்டரின் குருகுலத்திற்கு அனுப்பப்படுவாய். அங்கு வசிட்டரின் மனைவி அருந்ததி உன்னைத் தூங்கவிடாமல் விடியும் முன்னரே எழுப்பிவிடுவார்கள், அதனால் இப்பொழுதே உறங்கித் தீர்த்துவிடு” என்பதாகக் கற்பனை.
ஆண்டுகள் பல சென்றபின், விஜய நகர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கக் கோவிலில், ஒரு புதிய உற்சவத் திருவுருவம் இரகசியமாகச் செய்து வைத்தனர். அதையே முன்பு தொலைந்த விக்கிரகமாகக் கருதி வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் பல வருடங்களுக்குப் பின்னர், காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப் பெற்று, ஒரு திருவுருவம் மீண்டும்
திருவரங்கத்திந்குக் கொணரப்பட்டது. சில தலைமுறைகள் மாறி விட்டதால், யாருக்கும் எவ்வுரு முன்பிருந்தது, எது பின்பு
வந்தது என்று தெரியவில்லை. ஒரு பார்வையிழந்த
வயோதிக வண்ணான் (ஈரங்கொல்லி) அவ்வுருவங்களின் மேலாடைகளை நனைத்த நீரை முகர்ந்து
பார்த்து, காட்டினிடைக் கிடைத்த உருவே பழைய உற்சவமூர்த்தி என்று அறுதியிட்டுக் கூறியதாக
ஒரு கதை. இப்புகழ்களையுடைய உருவிற்கே இத்தாலாட்டு பாடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment