Saturday, 19 September 2015

A song on Balakrishna with layers of meaning

திருச்சி டாக்டர். ராமகிருஷ்ண ஈஸ்வரன் கிருஷ்ண ஜயந்தியன்று எழுதிய பாடல் 17/08/14
யசோதையின் தயிர் மத்தை எடுத்து ஒளித்து வைத்த பாலகன் கண்ணனிடம் அவள் கெஞ்சிக் கேட்பதைச் சித்தரிக்கும் பாடல்

ராகம்: ஹமீர்கல்யாணி                        தாளம்: ஆதி

(ப)   தயிர் மத்தைத் தந்திடு தங்கமே
தயிர் உடைந்தால் வெண்ணை வராதே  (தயிர்)

(அ.ப) வயிரம் கட்டி மாமணியிடை கட்டி
பயிலும் தளிர்நடைக் கண்ணனே        (தயிர்)

(ச.1)   ஆயர் தலைவன் வந்துன்னை வைவார்
மாயக் கள்வனே மண்ணை உண்டதை
தாயை நம்பு கோள்சொல்ல மாட்டேன்
ஏழை ஆய்ச்சி ஏதும் செய்கிலேன்       (தயிர்)

பதவுரை:
வயிரம்: வைரம்
இடைகட்டி: இடுப்பில் அரைஞாண் கயி ற்றில் கட்டி
ஆயர் தலைவன்: நந்தகோபன்
ஆய்ச்சி: யசோதை

பாடலின் உட்பொருள்: ஒரு பக்தன் கடவுளிடம் ஏதாவது வேண்டுமென்றால், முதலில் தனக்கு என்ன வேண்டும், ஏன் அது வேண்டும் என்று கூறுகிறான்.

புகழுரைக்கு மயங்காதவர் யார்? அதனால் அடுத்து கடவுளின் சிறந்த வடிவழகை, அவன் குணநலன்களை உயர்வாகப் பாராட்டுகிறான்.

புகழ்ச்சிக்கு அவன் மயங்கவில்லை என்றால், அவனிடம் கோபம் கொள்கிறான். சண்டைப் பிடிக்கிறான். கோபித்துக் கொண்டும் பயனில்லை என்று தெரிந்ததும் கடவுளிடம் ஒப்பந்தம் செய்ய முயல்கிறான் - அதாவது, நீ எனக்கு வேண் டியதைக் கொடுத்தால், நான் உனக்கு இன்னின்னது செய்வேன் என்று.


இவை எதுவும் பயனில்லை என்று புரிந்தபிறகு அவன் தாள்களில் சரணாகதி அடைவதே ஒரே வழி என்பது புலப்படுகிறது. ஒரு பக்தனின் மன முதிர்ச்சியை, பக்தியின் வளர்ச்சியை யசோதை மூலம் சித்தரிக்கும் பாடலிது

No comments:

Post a Comment