Saturday, 19 September 2015

A song on Malahanikareswara in Sringeri

ராகம்: தோடி 19/05/15

(ப)           மலைமேல மர்ந்த மலஹானி ௧ரனே
கலைக்கோ ட்டுமுனிவன் தந்தையி னுருவே  (மலை)

(அ.ப)        அலைபா யுமனத் திற்கோர் கடிவாளமே
வலைவீசி மீட்பாய் சாகரச் சுழலிலே           (மலை)

(ச)           தலையணி கங்கையால் கன்மம் கழுவிடு
உலைத்தீ வெம்மையால் ஆணவம் எரித்திடு
கலைமதி ஒளியால் மாயையை நீக்கிடு
இலைமறை காயாம் பரசிவம் காட்டிடு         (மலை)

பொழிப்புரை: சிருங்கேரியின் நடுவில் உள்ள குன்றின் மேல் கோவில் கொண்டவன் மலஹானிகரேச்வரன். ரிஷ்யச்ருங்க முனியின் (தமிழில் கலைக்கோட்டு முனி) தந்தை விபாண்டகர் முக்தி அடைந்தபோது  தாம் வழிபட்ட இலிங்கத்திலேயே  ஐக்கியம் ஆனதாகவும், அதே இலிங்க உருவே மலங்களை அழிக்கும் மல ஹானி கரனாக விளங்குவதாகக் கருதப் படுகிறது.


மனிதன் பரம்பொருளை அடையமுடியாமல் தடுப்பது மும்மலங்களான கர்மம் (கன்மம்), அஹங்காரம் (ஆணவம்) மற்றும் மாயை. இவற்றை நீக்கிப் பரசிவப் பேரானந்தத்தைத் தரவல்லது மலஹானிகரேச்வரனின் வழிபாடு. ஆன்மாவைச் சூழ்ந்த மலங்களை நீக்குவதற்காக அவன், கர்மம் கழுவிடும் கங்கையையும், ஆணவத்தைப் பொசுக்கும் செந்தீயையும், மாயை அகற்றிப் பேரின்பவொளி சேர்க்கும் சந்திரனையும் அணிந்திருப்பதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளான்.

No comments:

Post a Comment