Saturday, 19 September 2015

Thiruvonam song

The asterism of Thiruvonam in the Tamil month of Purattasi is of special significance to Vishnu. Our family has been gathering at the family deity Sri Ramachandramurthi temple in Kallidaikurichi, Tirunelvely Dt, Tamilnadu to perform special pujas on this occasion for over 100 years. This song was written in 2014 September to mark this occasion.

ராகமாலிகை                                                                                                  ஆதி

(தேஷ்                   
திருமாலின் ஆயிரம் நாமங்கள் கூறீர்
திருவோணம் கொண்டாட வாரீர் இங்கு              (திருமாலின்)
(.1) சாமா                  
வேங்கடமுடையோன் வந்த தினமிது
                               பங்கய உதரோன் உகந்த மீனிது
                               மங்களமான  மாவிளக்கிடு நாளிது
சங்கடம் சடுதியில் நீங்கிட இன்று                             (திருமாலின்)
(.2) சாரங்கா                         
வேந்தரின் வேந்தன் கோசலை தனயன்
அந்தமில் நலங்க ளருளும் அன்னை
கண்ணிமை போலிவர் காத்த இளையன்
பண்ணிசைப் பாடலால் ஏத்துவோம் இவரை     (திருமாலின்)
(.3) சிந்துபைரவி     
அந்தணர் மறைகள் ஓதித் திகழ்ந்திட
செந்தளிர் மலர்களால் மேனி பொலிந்திட
வந்தவர் அனைவரும் பாடிப் பணிந்திட  
அச்சுதா ……    அனந்தா
முகுந்தா கிருஷ்ணா என
கேசவ மாதவ வைகுந்தா
ராகவ ராமா காகுத்தா
வாமன யாதவ கோவிந்தா
மதுசூதனா... நாராயணா என                        
வந்தவர் அனைவரும் பாடிப் பணிந்திட 
சுந்தரன் அனுமனும் கேட்டு மகிழ்ந்திட                  (திருமாலின்)

(Note: Black-Madhyamam, Blue-Vilambam, Red- Dhuritham)

Meanings: வேங்கடமுடையோன்- திருப்பதி வெங்கடாசலபதி
பங்கய: தாமரை  உதரோன்: வயிற்றை உடையவன் 
வேந்தரின் வேந்தன்: ராஜாதி ராஜ எனப்படும் இராமபிரான் 
அந்தமில்: endless, அன்னை: சீதை 
 இளையன்: தம்பியாகிய இலக்குவன் 




No comments:

Post a Comment