Hanuman Song
திருச்சி டாக்டர். ராமகிருஷ்ண ஈஸ்வரன் ஹனுமத் ஜயந்தியன்று
எழுதிய பாடல் 21/12/14
(கஜ வதனா கருணா சதனா என்ற வர்ணமெட்டு)
ராகம்: ஸ்ரீரஞ்சனி தாளம்: ஆதி
(ப) கபிமுகனை
சரணம் அடைவோம்
வழி இதுவே மன ஸஞ்சலம் நீங்கிட
(கபிமுகனை)
(அ.ப) சங்கரஸுமனன்
கேசரி நந்தனன்
அஞ்சனை குமரன் பதங்கள்
பணிவோம் (கபிமுகனை)
(ச) வாயுமனோ
வேகம் எல்லாம் எம்
அநுமன் விரைந்ததற்கு ஈடாகுமோ?
ராமனை நினைத்தான் ஆழியைத்
தாவினான்
அன்னையைக் கண்டு கணையாழி
கொடுத்த (கபிமுகனை)
பதவுரை:
கபிமுகன்: வானர முகமுடைய ஹனுமான்
சங்கரஸுமனன்: சிவனுடைய அம்சம் தான் ஹனுமான் என்று கருதப் படுகிறது, தியாகராஜர் "சங்கராம்சுடை"
என்று ஆஞ்சனேயனைத் தன் "ஆட மோடி கலதே"
என்ற சாருகேசி ராகக் கிருதியில் குறிப்பிட்டுள்ளதை ஒப்பு நோக்குக
கேசரி நந்தனன்: அஞ்சனையின் கணவன் கேசரி. அதனால் வாயு புத்திரனான அநுமனின் வளர்ப்புத் தந்தையாகிறன்
கேசரி. ஹனுமான் சாலிஸாவில் “சங்கரஸுமன கேசரி நந்தன” என்பது 6வது தோஹாவாக இடம் பெறுகிறது
வாயுமனோ வேகம்……..: வேகங்களில் அதிக வேகம் வாயுவின் வேகம். அதைவிட வேகம், மனம் செல்லும் வேகம்.
இவற்றையெல்லாம் விட நம் அநுமனின் வேகம் அதிகம் என்று கூறுகிறது இப்பாடலின் சரணம்
ஆழி: கடல்
அன்னை: சீதை
No comments:
Post a Comment