Saturday, 19 September 2015

A song on Arunachaleswara
Use thelink below to listen to the song
https://onedrive.live.com/redir?resid=467EBA89D7C571FB!34230&authkey=!APyOuBY38Z9m-hE&ithint=file%2cwav

திருச்சி டாக்டர். ராமகிருஷ்ண ஈஸ்வரன் 8/3/15  அன்று திருவண்ணாமலை புறவழிச் சாலையில் காரில் பயணிக்கும்போது  எழுதிய பாடல்

ராகம்: ஸாவேரி                             தாளம்: ஆதி

(ப)    விடையேறும் ஆதிரையான் தாளே
கடைத்தேறும் வழியாய்க் கொள்வோமே                       (விடை)

(அ.ப) சடையில் ஆறணிந் துடலில் நீறணிந்
திடையில் தோலணிந் திடத்தில் மாதணிந்து                (விடை)

(ச)    மன்று ஆடிய செஞ்சிலம்பனைச்
சென்று நோக்குவீர் தஞ்சம் புகுவீர்
கன்று நினைந்து பால்சொரியும் பசுவாய்
குன்று அருணையோன் அருளைப் பொழிவான்          (விடை)

பகுபதவுரை
ஆறணிந் துடலில்: ஆறணிந்து உடலில்
நீறணிந் திடையில்: நீறணிந்து இடையில்
தோலணிந் திடத்தில்:தோலணிந்து  இடத்தில்
மாதணிந்து: மாது அணிந்து

அரும்பதவுரை
விடை: ரிஷபம், இடபம் 
ஆதிரையான்: சிவன்
ஆறு: கங்கை
நீறு: விபூதி, சாம்பல்
தோல்: புலித்தோல்
இடத்தில்மாது: அர்த்தநாரி, இடது பக்கம் உமையை வைத்தவன், மாதொருபாகன்
மன்று: பொற்சபை
குன்று: திருவண்ணாமலை

அருணையோன்: அருணாசல ஈசன்

No comments:

Post a Comment